பதிவு:2024-09-17 11:59:32
திருவள்ளூரில் சர்வதேச ஓசோன் தினம் : கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி, விழிப்புணர்வு பேரணி :
திருவள்ளூர் செப் 16 : ஆண்டுதோறும் சர்வதேச ஓசோன் தினம் – 2024 செப்டம்பர் 16 ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சர்வதேச ஓசோன் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு பேரணியை திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஆ.கற்பகம், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் டி.ரவிச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பேரணி திருவள்ளூர் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சார்பில் சர்வதேச ஓசோன் தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு 200 தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் 200 கல்லூரி மாணவர்கள் மூலம் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான வாசகங்களை கையில் ஏந்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் திருவள்ளூர் பேரூந்து நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி சென்றது. முன்னதாக திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஆ.கற்பகம் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
பேரணியில் பங்கேற்ற தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மஞ்சபையுடன் மரக் கன்றுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது இதில் ஏராளமான மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.