திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் குளறுபடி: பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இன்று செஸ் போட்டி நடைபெறும் என அறிவித்த நிலையில் நேற்று நடத்தி முடித்ததாக கூறியதால் மாணவ மாணவிகள் பெற்றோர் அதிர்ச்சி :

பதிவு:2024-09-17 12:02:11

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். அதன்படி எந்தெந்த விளையாட்டு போட்டிகள் எந்தெந்த பள்ளி கல்லூரிகளில் நடைபெற தினமும் அட்டவணை தடகளம் நீச்சல் மேசைப் பந்து, இறகுப்பந்து கிரிக்கெட் சிலம்பம் கூடைப்பந்து கால்பந்து கையுந்து பந்து கபடி கோகோ செஸ் வலை போல் பந்து கைப்பந்து என இந்த போட்டிகள் எங்கெங்கு எந்தெந்த தேதியில் நடைபெறும் என முறைப்படி அறிவிப்பு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையத்தில் வெளியிட்டு அதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொது பிரிவினர்கள் அரசு ஊழியர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான செஸ் விளையாட்டு போட்டி தெரிகின்ற ஊரில் உள்ள ஆக்ஸ்போர்ட் பப்ளிக் பள்ளியில் காலை 7:00 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது அடுத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அங்கு குவிய தொடங்கினர்.ஆனால் செஸ் அகாடமி மூலம் நேற்று போட்டிகள் நடைபெற்று முடிந்து விட்டதாகவும் இன்று நடைபெறாது எனவும் அந்த பள்ளி சார்பில் தெரிவித்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலரை நேரில் சந்தித்து முறையிட வந்தனர்.

ஆனால் கலெக்டர் முடிவின்படியே இந்த போட்டிகள் நடைபெற்று வருவதாகவும் தனக்கு எதுவும் தெரியாது எனவும் விளையாட்டு அலுவலர் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குவிந்துள்ளனர் அதனால் அங்கு பரபரப்பாக காணப்படுகிறது. பள்ளி கல்லூரி மாறாத மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகளை அறிவித்துவிட்டு அகடமியில் இருப்பவர்களை அழைத்து யாரையோ திருப்தி படுத்துவதற்காக தங்களை அலைக்கழித்து இருப்பது கண்டனத்திற்குரியது என பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். முதலமைச்சர் கோபிக்கான போட்டியை நடத்துவதில் எவ்வளவு குளறுபடிகள் இவ்வளவு தில்லுமுல்லுகள் இருப்பதால் விளையாட்டு துறை எப்படி மென்மேலும் வளரும் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மாணவர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு துறை தன்னிச்சையாக முடிவெடுத்து யாரோ ஒரு சிலர் பயனடைவதற்காக போட்டிகளை நேற்று நடத்தி முடித்ததாகவும் குற்றம் சாட்டினர்.