வழுதலம்பேடு அருள்மிகு பிடாரி எட்டியம்மன் கோயிலில் இரு தரப்பு மக்களும் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமையில் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டனர் :

பதிவு:2024-09-17 12:06:01



வழுதலம்பேடு அருள்மிகு பிடாரி எட்டியம்மன் கோயிலில் இரு தரப்பு மக்களும் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமையில் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டனர் :

வழுதலம்பேடு அருள்மிகு பிடாரி எட்டியம்மன் கோயிலில் இரு தரப்பு மக்களும் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமையில் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டனர் :

திருவள்ளூர் செப் 17 : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம் வழுதலம்பேடு கிராமம் அருள்மிகு பிடாரி எட்டியம்மன் கோவிலில் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் பொன்னேரி சார் ஆட்சியர் வாஹே சங்கத் பல்வந்த் ஆகியோர் முன்னிலையில் இரு தரப்பினர் பொதுமக்களும் கோவிலுக்கு சென்று அழைத்து வரப்பட்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி வட்டம் வழுதலம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிடாரி எட்டியம்மன் திருக்கோவிலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற இருந்த போது சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதை அடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பாக அனுமதி வழங்கப்பட்டதை எடுத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அன்றைய தினம் பாதை பிரச்சனை காரணமாக மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருக்கோயில் பூட்டப்பட்டது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த வாரம் வியாழக்கிழமை மீண்டும் மாவட்ட ஆட்சியார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மூலம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.இந்த கோயிலுக்கான 160 மீட்டர் நீளமுடைய பாதை தனியார் நிலத்தில் அமையவில்லை இது ஏற்கனவே திருக்கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பாதை தற்போது அந்தப் பாதை இந்து சமயஅறநிலைத் துறையின் பேரிலேயே பட்டா செய்யப்பட்டுள்ளது. அந்தப் பாதை பொது பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு தரப்பினருகளிடையே ஒற்றுமையாக அனைவரும் சேர்ந்து வழிபட வேண்டும் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தினோம். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு நிதியாக ரூ.76 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இந்த பெரிய வழுதலம்பேடு கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைப்பதற்கு ரு.20 இலட்சம் மதிப்பீட்டிலும், பெரிய வழுதலம்பேடு கிராமம் வெயிட்டிங் செட் அமைக்கும் பணிக்கு ரூ.5.91 இலட்சம் மதிப்பீட்டிலும், பெரிய வழுதலம்பேடு எட்டியம்மன் கோவில் தெருவில் CC சாலை அமைக்க ரூ.8.865 இலட்சம் மதிப்பீட்டிலும், வழுதலம் கிராமத்தில் மயானத்திற்கு சி.சி சாலை அமைக்க ரூ.24.934 இலட்சம் மதிப்பீட்டிலும்,வழுதலம் காலணி முதல் மயானம் வரை சி.சி சாலை அமைக்க ரூ.16.623 இலட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் சிறப்பு நிதியாக ரூ.76 இலட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இன்று அனைவரும் ஒன்றிணைந்து வழிபடாதவர்களும் வழி விட்டு வழிபடுவதற்கு முதல் படி எடுத்து வைத்து உள்ளோம் என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.இதில் இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் கே. சித்ராதேவி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணகுமாரி, துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறையினர்கள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.