பதிவு:2024-09-17 12:11:01
திருவள்ளூரில் சமூக நீதி நாள் உறுதி மொழியினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர் :
திருவள்ளூர் செப் 17 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நீதி நாள் உறுதி மொழியினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டார்.
உறுதிமொழியில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்-யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்! மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.
சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்! என்ற சமூக நீதி நாள் உறுதி மொழியினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார் ஏற்றுக் கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டார்.
இதில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன் (பொது), சத்ய பிரசாத் (தேர்தல்), திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.