காசிநாதபுரம் கிராமத்தில் துய்மை சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்தார் :

பதிவு:2024-09-19 12:25:29



காசிநாதபுரம் கிராமத்தில் துய்மை சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்தார் :

காசிநாதபுரம் கிராமத்தில் துய்மை சேவை  விழிப்புணர்வு நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் செப் 18 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பட்டாபிராமபுரம் ஊராட்சி காசிநாதபுரம் கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் தூய்மை சேவை-2024 விழிப்புணர்வு துவக்க விழா நிகழ்ச்சியில் தூய்மை உறுதி மொழியினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :

திருவள்ளூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) திட்டத்தின் வாயிலாக பொது மக்களிடையே பல்வேறு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி பொதுமக்களிடையே சுகாதார முன்னேற்றத்தின் மன மாற்றம் மற்றும் நடத்தை மாற்றம் ஏற்படுத்தும் வகையில். செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை பொதுமக்களுடன் இணைந்து பொது இடங்களில் பெரு அளவில் தூய்மை பணி மேற்கொள்ளுதல், மரம் நடுதல் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள குப்பைகளை அகற்றி மீண்டும் அவ்விடத்தில் குப்பைகளை கொட்டாத வண்ணம் அறிவிப்பு பலகை வைத்தல், மற்றும் குப்பை கொட்டும் இடங்களில் மரங்களை நட்டு பசுமை சூழலை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்த உள்ளன.

அதுமட்டுமில்லாமல் ஊரகப் பகுதிகளில் பொது இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றுதல் பொது இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மரங்கள் நடுதல் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை பிரித்து கையாளுதல் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துதல் தூய்மை காவலர்களின் நல வாழ்வு மேம்படுத்துதல், உறுதிமொழி ஏற்றுக்கொள்ளுதல் தூய்மை சேவை 2024 நிகழ்வில் அதிகளவில் பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளை ஈடுபடுத்தி அவர்கள் வாயிலாக தூய்மை பணியினை மேற்கொண்டு தூய்மை திருவள்ளூர் இறக்கினை எய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் த,பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2024-2025 பெருந்திரள் மரக்கன்றுகள் நடுதல் பணியினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை. ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தனம், சாந்தி, பட்டாபிராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி பாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.