பதிவு:2024-09-19 12:28:22
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆவடி வட்டத்தில் பல்வேறு திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் செப் 19 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டத்திற்கு உட்பட்ட கொசவன் பாளையத்தில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற வகுப்பறை கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் வீடு கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்கவும் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தினர்.
லட்சுமிபதி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பண்ணை குட்டைகளை பார்வையிட்டு குளத்தின் கரைகளில் பனை விதை நடவு செய்வது குறித்தும், பின்னர் திருநின்றவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் பயிற்சி வழங்குவும், புறநோயாளி பிரிவு நுழைவுச் சீட்டில் தமிழில் பதிவேற்ற செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,
மாற்றுத்திறனாளிக்கான சாய்வு தளம், ஆரம்ப சுகாதார நிலையத்தினை விரைவில் புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தொடர்ந்து நாச்சியார் சத்திரம் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எடை உயரம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு உணவுகளை குழந்தைகளுக்கு வழங்குவதற்கு முன் நீங்கள் பரிசோதனை செய்த பின் வழங்க வேண்டும். அதே வளாகத்தில் தூய்மையே 2024 உறுதிமொழி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி ஆட்சியர் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
தொடர்ந்து நடுகுத்தகை கிராமத்தில் உள்ள பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் பாலவேடு பகுதியில் 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டிடம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து தண்டுரை மேம்பாலம் பணி வருகின்ற 25 ஆம் தேதி ஒரு பகுதியினை திறந்து விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பின்னர் அயப்பாக்கம் கிராமத்தில் 29 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு, ரூ 2 கோடி மதிப்பீட்டில் மின்சார சுடுகாடு அமைக்கும் பணிகளின் தன்மை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து மாவட்ட வழங்கல் துறை சார்பாக 10 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையும், வருவாய்த்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் சான்றிதழ்கள் வழங்கினார்.
இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தாசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை. ஜெயக்குமார். திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், வேளாண் இணை இயக்குநர் முருகன், வட்டாட்சியர் சசிகலா,பூவிருந்தவல்லி, வில்லிவாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.