திருவள்ளூர் பிஜேபி மேற்கு மாவட்ட செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு : 4 பேர் கொண்ட நபர்கள் வெறிச்செயல் :

பதிவு:2024-09-19 12:30:04

திருவள்ளூர் செப் 19 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக மாவட்ட செயலாளரும் சிறுவானூர் ஊராட்சி மன்ற தலைவர் பவானியின் கணவருமான பி.டி ரமேஷ் குமார் (45) அந்த கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதால் அதனை அகற்ற ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் என்ற முறையில் நேரில் சென்று ஆக்கிரமிப்பாளர்களிடம் பேசி உள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த துரையின் மகன் வேலு என்ற கருவாடு வேலு என்பவருக்கும் பி.டி ரமேஷ் குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டள்ளது.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த வேலு மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் பி.டி. ரமேஷ் குமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரமேஷை மீட்டு உறவினர்கள் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறுவானூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.