வேளாண்மைத்துறையில் விவசாயிகள் மின்னணு பண பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் பெறும் வசதி : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-09-19 12:36:51

திருவள்ளூர் செப் 19 : தமிழ்நாடு அரசு வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் அவர்களின் உத்தரவின்; படியும் வேளாண்மை இயக்குநர், சென்னை அவர்களின் ஆலோசனையின்படியும் திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்;கி வரும் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்;களில் விவசாயிகளின் நலன் கருதி மின்னணு பணபரிவர்த்தனை மூலம் விவசாயிகளுக்கு தேவைப்படும் இடுபொருட்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுட்ட உரங்கள், ஜிங்க் சல்பேட், ஜிப்சம்; உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்;களில் ஏ.டி.எம் கார்டு, கூகுள்பே, போன்பெ உள்ளிட்ட மின்னணு வசதிகள் மூலம் பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை விரிவாக்க மையங்;களில் அதற்கான பணமில்லா மின்னணு பரிவர்த்தனை செய்யும் பி.ஓ.எஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இடுபொருட்களை வாங்;க வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு செல்லும் விவசாயிகள் முழுதொகை அல்லது பங்;களிப்புத் தொகையினை தங்;களது ஏ.டி.எம்.கார்டு, கூகுள்பே, போன்பே மூலமாக பணம் செலுத்தி இடுபொருட்கனை பெற்று பயனடையலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.