பதிவு:2024-09-26 12:40:21
திருவள்ளூரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு ரூ.41,500 மதிப்புள்ள மடிக்கணிணி : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் செப் 25 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம்,கரிமேடு,அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அ.இவாஞ்சலின் த/பெ அமிர்தம்சாம், (பார்வையற்ற மாற்றுத்திறனாளி) என்பவர் பட்டாபிராமில் உள்ள தர்மமூர்த்தி ராவ் பகதூர் பி.ஏ (ஆங்கிலம்) பட்ட படிப்பை முதலாமாண்டு பயின்று வருகிறார்.
இந்நிலையில் மாணவி அ.இவாஞ்சலின், தனது கல்லூரி படிப்பினை மடிக்கணிணி இருந்தால் உதவியாக இருக்கும் என்பதால் மடிக்கணிணி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் மனு அளித்தார்.
அதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அ.இவாஞ்சலின் என்ற மாணவிக்கு ரூ.41,500 மதிப்புள்ள மடிக்கணிணியை மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து வழங்கினார்.
அப்பொழுது மாணவி அ.இவாஞ்சலின் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.