பதிவு:2024-09-26 12:46:50
திருவள்ளூர் அருகே செல்போன் சார்ஜரில் மின்சாரம் பாய்ந்து 16 வயது சிறுவன் பலி :
திருவள்ளூர் செப் 25 : திருவள்ளூர் அடுத்த கிளாம்பாக்கம் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தீனா (16). இவர் 8ம் வகுப்பு வரை படித்து விட்டு பள்ளி பாதிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.இந்நிலையில் நேற்று திருவள்ளூர் ஒன்றியம் அரண்வாயல் பகுதியில் உள்ள பார்ட்டி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பங்கேற்க சென்ற இசைக் குழுவினர்களுடன் தீனாவும் சென்றுள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து 11 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்த போது இசைக்குழுவினர் கிளம்பி கொண்டிருந்தனர். அப்போது தீனா தனது செல்போனை சார்ஜரில் போட்டு வைத்திருந்ததை கழட்டி உள்ளான். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த தீனாவை உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே தீனா உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.