பதிவு:2024-09-26 13:04:02
ஆவடி ,பட்டாபிராம் கடவு எண்,2 க்கு பதிலாக ரூ .78.31 கோடி மதிப்பிற்கு கட்டப்பட்டுள்ள ஒரு பகுதி இரயில்வே பாலம் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் .காந்தி திறந்து வைத்தார் :
திருவள்ளூர் செப் 26 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ,பட்டாபிராம் கடவு எண்,2 க்கு பதிலாக ரூ.78.31 கோடி மதிப்பிற்கு கட்டப்பட்டுள்ள இரயில்வே பாலத்தினை (ஒரு பகுதி) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சா.மு.நாசர் (ஆவடி) ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி) ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து பேசினார்.
கடந்த காலங்களில் இரயில் செல்லும் தருணங்களில் இரயில்வே கேட் மூடப்படுவதால், இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையை தவிர்க்கும் வகையில் மார்ச்-2011-ல் இத்திட்டத்திற்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது பணி முடிவுற்று இரு வழித்தடமுள்ள மேம்பாலத்தில் ஒருவழித்தடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. 01.03.2011–ல் நிர்வாக ஒப்புதல் ரூ.33.48 கோடிக்கு வழங்கப்பட்டது 11.04.2017–ல் திருத்திய நிர்வாக ஒப்புதல்-I, ரூ.52.11 கோடிக்கு பெறப்பட்டது. 08.11.2022–ல் திருத்திய நிர்வாக ஒப்புதல்-II, ரூ.78.31 கோடிக்கு பெறப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 640 மீட்டர் ஆகும்.
மாநில அரசு செலவிட்ட மொத்த தொகை ரூ.67.35 கோடி , நிலம் கையகப்படுத்தப்பட்ட செலவு ரூ. 23.53 கோடி, பாலப் பணிகள் ரூ. 35.58 கோடி, தெரு விளக்கு ரூ. 0.41 கோடி, விளக்கு மற்றும் சேதமடைந்த குழாய்கள் மாற்றி அமைத்தல் செலவு. ரூ. 2.80 கோடி, இதர செலவுகள், ரூ. 5.03 கோடி, மொத்தம் Rs.67.35 கோடி ஆகும். இப்பாலம் திறக்கபடுவதனால் சார்லஸ் நகர், காந்திநகர், தண்டூரை ஆவடி, நெமிலிச்சேரி பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், இதர வாகனங்கள் பாதுகாப்பாக சென்று வர பல்லாயிரக் கணக்காக பொதுமக்கள் பயனடைவர். 21.03.2018 அன்று தொடங்கப்பட்ட பணி 20.03.2020 அன்று முடிவுற்றிருக்க வேண்டும். நில எடுப்பு பணி, இரயில்வே துறையின் மேம்பாலம் கட்டி முடிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் கொரோனா ஊரடங்கு போன்றவற்றால் ஆகஸ்டு மாதம் 2024-இல் பணி முடிக்கப்பட்டது என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் ச. கந்தசாமி, ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஆ.கற்பகம் நெடுஞ்சாலைத்துறை நபார்டு தலைமைச் செயற்பொறியாளர் தேவராஜ், கோட்ட பொறியாளர் சிவசேனா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.