பாரிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.2.57 கோடி செலவில் 5 புதியமருத்துவ கட்டிடங்கள் : அமைச்சர்கள் ஆர் .காந்தி, மா. சுப்ரமணியன் திறந்து வைத்தனர் :

பதிவு:2024-09-26 13:09:17



பாரிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.2.57 கோடி செலவில் 5 புதியமருத்துவ கட்டிடங்கள் : அமைச்சர்கள் ஆர் .காந்தி, மா. சுப்ரமணியன் திறந்து வைத்தனர் :

பாரிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.2.57 கோடி செலவில் 5 புதியமருத்துவ கட்டிடங்கள் : அமைச்சர்கள் ஆர் .காந்தி, மா. சுப்ரமணியன் திறந்து வைத்தனர் :

திருவள்ளூர் செப் 26 : திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டத்திற்க்குட்பட்ட பாரிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் .காந்தி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ரூ.2.57 கோடிசெலவில் 5 புதியமருத்துவ கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் சா.மு. நாசர் ( ஆவடி) ஆ. கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி) ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தனர்.அப்பொழுது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது :

திருவள்ளூர் மாவட்டத்தில், பூவிருந்தவல்லி பாரிவாக்கத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், ரூ.60இலட்சம் மதிப்பீட்டில் பெருமாள்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் , ஆவடி வட்டம், திருநின்றவூர் ரூ.82இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், திருத்தணி வட்டம், அகூர் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய கட்டிடம், ஆவடி வட்டம், தாசர்புரம் ரூ.25இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய கட்டிடம் திருவள்ளூர் மாவட்டத்தில் முழுவதும் மொத்தம் ரூ.2.57 கோடி செலவில் 5 புதிய மருத்துவ கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பதில் பெருமையாக கருதுகிறேன் என்று கூறினார்.

பின்னர் பெரு நிறுவன சுற்றுச்சூழல் சமூக பொறுப்பு நிதியினை மாவட்ட ஆட்சியரின் ஏற்பாட்டின் பேரில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சமுதாய குடும்ப தத்தெடுப்பு திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ரூ. 60 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்தினையும், மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை உபகரணங்களும், காச நோய் துறைக்கு நிக்ஷய் மித்ரா திட்டத்தில் மூலம் 500 காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்துக்காக 9 மாதங்களுக்கு ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் செல் கவுண்டர் வசதி ஏற்படுத்திட அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மேலும் 9 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், 3 பயனாளிகளுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் விலையில்லா கண் கண்ணாடிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

தொடர்ந்து ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்படும் NABH தேசிய தரச் சான்றிதழ் இந்த வருடம் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது அவ்விருதினை அமைச்சர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் வழங்கினர்.முன்னதாக தமிழ்நாடு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

இதில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் பி. பிரியா ராஜ் (திருவள்ளூர்), ஜெ. பிரபாகரன் (பூவிருந்தவல்லி), இணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மீரா, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், ஆவடி மாநகராட்சி நல அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட சுற்றுசூழல் அலுவலர் (பொன்னேரி) லிவிங்ஸ்டன், துணை இயக்குனர்கள் சேகர் (குடும்ப நலம்), வசந்தி (காசநோய்) திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேசிங்கு, பாரிவாக்கம் ஊராட்சித் தலைவர் தனிகாசலம் , பூவிருந்தவல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ், பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ், மற்றும் மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.