பதிவு:2024-10-03 12:04:03
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் தேசிய தன்னார்வ இரத்ததான தினம் :
திருவள்ளூர் அக் 02 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் தேசிய தன்னார்வ இரத்ததான தினம் 2024 கொண்டாடப்பட்டது.இதில் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமை தாங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய தன்னார்வ இரத்ததான தினம் 2024 எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் - 2024 இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை father of transbution medicine in india ஜெய் கோபால் ஜானி அவர்களின் பிறந்த தினத்தில் அவரது சேவையினை பாராட்டும் வகையில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆகவே இத்தினத்தில் குருதி கொடையாளர்களே இவ்வாறு கௌரவப்படுத்துவதன் மூலம் அவர்கள் 365 நாட்களும் உயிர்காக்கும் குருதி கொடையாளர்களுக்கு ஊந்து சக்தியாக இருக்கும் அவர்களை இத்தருணத்தில் கௌரவப்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், மதுரை மருத்துவக் கல்லூரி மிகவும் பழமை வாய்ந்த இரத்ததானம் கிளப் உள்ளது. இந்தக் கிளப் மாணவர்கள் கொண்டு செயல்படுகிறது. இதில் உள்ள மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமல்லாமல் இரத்த கொடையாளர்களாகவும் இருப்பார்கள்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்கள் கொண்டு செயல்படுத்த வேண்டும் என மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரரை அறிவுறுத்தினார். பின்னர் குருதி தேவை திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக மிக அவசியமான ஒன்றாகும். குருதி சேவையினை சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் ரத்த சோகை மகப்பேறு காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு, விபத்து போன்ற பல்வேறு திட்டத்திற்கு இரத்ததானம் செய்து நீங்கள் பல உயிர்களை காப்பாற்றி இருப்பீர்கள்.
இதேபோல் இரத்த தானம் முன்னெடுப்பு சேவை பணிக்கு பங்கெடுத்து பல ஏழை எளிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குருதி தானம் செய்திட உறுதுணையாக இருக்க வேண்டும். நீங்கள் இச் சமுதாயத்தில் தனித்துவமாக இருந்து உதிரம் கொடுத்து உயிரை காக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தெரிவித்தார். முன்னதாக இரத்ததானம் குறித்த உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் ஏற்றுகொள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.தொடர்ந்து இரத்ததான கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார்.
இதில் கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் சண்முகவள்ளி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர் பிரியா ராஜ், இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மீரா, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் பிரதீபா, மாவட்ட திட்ட மேலாளர் (பொ) பவி தர்சினி, துணை இயக்குனர் காசநோய் சங்கீதா மற்றும் தன்னார்வ இரத்த கொடையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.