பதிவு:2022-05-31 15:00:14
திருவள்ளூரில் இந்திய பிரதமர் பி.எம்.கேர் திட்டத்தின் கீழ் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.10 இலட்சத்திற்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் துவக்கம்
இந்திய பிரதமர் பி.எம்.கேர் என்ற திட்டத்தின் கீழ் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ. 10 இலட்சத்திற்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, உரையாற்றிய நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்திலிருந்து காணொலி காட்சி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக தாய் மற்றும் தந்தையை இழந்த 13 குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் சி.எம்.கேர் என்ற திட்டத்தின் கீழ் தலா ரூ. 10 இலட்சம் வீதம் ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் உதவித்தொகைக்கான ஆணைகளையும், தலா ரூ. 5 இலட்சம் வீதம் ரூ. 65 இலட்சம் மதிப்பீட்டிலான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும் மற்றும் PM Cares for Children என்ற சான்றிதழ்களையும் 13 குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தேவையான நிதி ஆதரவு, உணவு, உடை மற்றும் இருப்பிடம் உயர்க்கல்வி தொடர்வதை உறுதி செய்தல், உடல் நல நினை உறுதிப்படுத்துதல் மட்டுமின்றி மாதாந்திர உதவித் தொகையாக ஓராண்டிற்கு அதிகப்பட்சம் ரூ.20 ஆயிரம் வழங்கயிருப்பதாகவும் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் வழங்கப்படும் ரூ. 50 ஆயிரம் பெறுவதற்கான பணி,உயர்க்ல்வி முடித்த குழந்தைகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலமாக அவர்களின் உயர்கல்விக்கு ஒவ்வொரு மாதமும் கல்வி நிதியுதவியாக ரூ.2,000 ஓராண்டிற்கு அதிகப்பட்சமாக ரூ. 20 ஆயிரம் வரை வழங்கப்டும் தொகையானது நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிதி ஆதரவுத் திட்டம், வங்கி கடன், ஆன்லைன் வாயிலாக வங்கி கடன்கள் பெறுதல், ஓராண்டிற்காக பட்டயப்படிப்பிற்காக ரூ. 4.5 இலட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படும்.தொழிற்கல்வி பயில கர்மா திட்டம், சுவர்ணா திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் 18 வயது நிறைவடைந்தவர்களுக்கு ரூ. 1.20 இலட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படும். 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற குழந்தைகளின் உயர் கல்விக்காக தேசிய நிதியுதவி வளைதளத்தின் மூலம் கல்வி நிதி உதவி வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு ரூ. 5 இலட்சத்திற்கான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என தேசிய சுகாதார அதிகாரி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாநில அரசின் மூலம் வழங்கப்படும் ரூ 5 இலட்சம் நிதியுதவி 11 சிறார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு சிறார்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு மாநில அரசின் மூலம் வழங்கப்படும் ரூ. 3 இலட்சம் நிதியுதவி 420 சிறார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 190 சிறார்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எம்.நிஷாந்தி, குழந்தைகள் நல குழுமத் தலைவர் மேரி ஆக்ஸிலியா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், சைல்டு லைன் திட்ட உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.