பதிவு:2024-10-03 12:13:22
திருத்தணி நகராட்சியில் சுமார் 4.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.1274 இலட்சத்தில் புதிய பேருந்து நிலையம் : அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டார் :
திருவள்ளூர் அக் 03 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி பகுதிகளில் சுமார் 4.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.1274 இலட்சம் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தினை சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டு திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமையில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
திருத்தணி நகராட்சி பகுதிகளில் சுமார் 4.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.1274 இலட்சம் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு திட்ட பணிகளின் தற்போதைய தன்மையினை கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிப்பதற்க்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிவுறுத்தினார்.இதில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வை.ஜெயக்குமார், உதவி ஆட்சியர் பயிற்சி ஆயுஷ் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.