திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மகாத்மா காந்தியின் 155 ஆவது பிறந்தநாள் பாதயாத்திரை :

பதிவு:2024-10-03 12:15:11



திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மகாத்மா காந்தியின் 155 ஆவது பிறந்தநாள் பாதயாத்திரை :

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மகாத்மா காந்தியின் 155 ஆவது பிறந்தநாள் பாதயாத்திரை :

திருவள்ளூர் அக் 03 : தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 155 வது பிறந்தநாள்,பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 43-வது நினைவு நாள், லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் 120 வது பிறந்தநாள் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே ஆணையின்படியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிகள் தலைவர் கு.செல்வப் பெருந்தகை அறிவுறுத்தலின்படியும், திருவள்ளூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் படியும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான துரைசந்திரசேகர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் டி.எல்.சதாசிவலிங்கம் ஆகியோர் திருவள்ளூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை சேலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஒன்றிணைவோம் மத நல்லிணக்கத்தை போற்றுவோம் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் இன் வெறுப்பு அரசியலை முறியடிப்போம் என்ற முழுக்கத்துடன் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் துரை சந்திரசேகர் தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றது.

திருவள்ளூர் ரயில்வே நிலையம் அருகில் இருந்து திருவள்ளூர் எல்ஐசி வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பாதை யாத்திரையில் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைகளில் கொடிகளை ஏந்தியவாறு பாதயாத்திரைகள் கலந்து கொண்டனர்.இறுதியாக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான துரைசந்திரசேகர் சிறப்புரையாற்றினார்.