திருப்பாச்சூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள் : போட்டோவுக்கு போஸ் கொடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டதாக கணக்கு காட்டிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியது :

பதிவு:2024-10-03 12:17:02



திருப்பாச்சூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள் : போட்டோவுக்கு போஸ் கொடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டதாக கணக்கு காட்டிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியது :

திருப்பாச்சூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள் : போட்டோவுக்கு போஸ் கொடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டதாக கணக்கு காட்டிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியது :

திருவள்ளூர் அக் 03 : பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பாச்சூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த ஜி.சோபன்பாபு. இந்த ஊராட்சியில் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தொடர் புகாரின்காரணமாக ஊராட்சி மன்றத் தலைவருக்கு நிதி கையாளும் அதிகாரத்தை மாவட்ட கலெகடர் த.பிரபு சங்கர் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்திட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி திருப்பாச்சூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு திருப்பாச்சூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெறும் என பேனர் அடித்து சமுதாய கூடத்தில் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் காலை 11:30 மணி வரை ஒருவர் கூட கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வரவில்லை.

குறிப்பாக ஊராட்சி பொதுமக்களும் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் கெத்சியால் வசந்தகுமார் என ஒருவர் கூட பங்கேற்காமல் முழுமையாக கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இருப்பினும் 11: 35 மணி அளவில் அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் என்னை போட்டோ எடுத்துக்கோங்க... நான் கிராம சபையில் கலந்துகிட்டேன்னு சொல்லிடலாம்... வேறுயாரும் விஏஓ கலந்து கொள்ள வரவில்லைன்னு சொல்லக்கூடாது என்று விஏஓ லோகநாதன் கிராம சபை நடைபெறும் சமுதாயக் கூடத்தில் வந்து அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

பின்னர் ஐந்து நிமிட இடைவெளியில் தோட்டக்கலைத் துறையை சேர்ந்த அதிகாரிகள் இருவர் கிராம கிராமசபை நடைபெறுவதை பார்வையிடுவதற்காக வந்திருந்த நிலையில் அவர்களும் சமுதாய கூடத்தில் அமர்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு திரும்பிச் சென்றனர். விடியா முதலமைச்சர் தான் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்னு பார்த்தா... அரசு அதிகாரிகளும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது காமெடியாக இருந்தது.இதனிடையே பொதுமக்களும் ஊராட்சி நிர்வாகிகளும் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

ஊராட்சிக்கு சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான நிதி வந்திருந்ததாகவும் அதனை ஊராட்சி நிர்வாகம் சரியாக செலவிடாததால் ரூ.20 லட்சம் அளவிற்கு பணம் மீண்டும் அரசுக்கு சென்று விட்டதாகவும் இதனால் அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் ஊராட்சி மக்களாகிய எங்களுக்கு ஊராட்சி நிதியை கூட ஊராட்சி மன்ற திமுக வை சேர்ந்த தலைவர் பயன்படுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இனிமேல் கிராம சபையில் பங்கேற்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதால் கிராம சபையை புறக்கணித்தோம் எனவும் தெரிவித்தனர். திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அரசு அறிவித்த கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.