திருவள்ளூரில் 12 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.5.37 இலட்சத்தில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வழங்கினார் :

பதிவு:2024-10-04 14:13:27



திருவள்ளூரில் 12 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.5.37 இலட்சத்தில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வழங்கினார் :

திருவள்ளூரில் 12 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.5.37 இலட்சத்தில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வழங்கினார் :

திருவள்ளூர் அக் 04 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 மாவட்ட விழிக்கண் கண்காணிப்பு முன்றாம் காலாண்டு குழு கூட்டம் மற்றும் தூய்மை பணியாளர்கள் மறுவாழ்வு அளித்தல் தொடர்பான மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள், ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் தீருதவித் தொகை உரிய காலத்திற்க்குள் வழங்குவது குறித்தும் வன்கொடுமை நிலுவை வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் தொடர்பான மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாநகராட்சி ஊராட்சி பேரூராட்சி நிர்வாகங்களில் தூய்மை பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் மற்றும் அவர்களது முன்னேற்றம் குறித்தும், தனியார் நிறுவனம் மற்றும் தனி நபர்கள் மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவதை தடுத்தல் குறித்தும், தூய்மை பணிபுரிவோர் நலவாரிய உறுப்பினர்கள் பட்டியலில் அனைத்து தூய்மை பணியாளர்களை சேர்த்து உறுப்பினர் அட்டை வழங்கிடவும் மற்றும் அவர்களுக்கான நலத்திட்டங்கள் வழங்கிட வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து தாட்கோ திட்டத்தின் கீழ் 12 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.5,37,500 விபத்து நிவரான தொகை , இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவி தொகை , கல்வி உதவி தொகை க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த்,வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்), தீபா (திருத்தணி), மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராணி தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர் ஹரிஷ் குமார் திருவள்ளூர் /திருத்தணி, அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.சி.எஸ்.டி பிரிவு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் மற்றும் அலுவல் சாரா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.