பதிவு:2024-10-04 14:15:41
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு ,சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் :
திருவள்ளூர் அக் 04 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு , சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆய்வுக் கூட்டம் காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள், ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போதைப் பொருட்கள் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை தடுப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறையினர்கள் கூட்டாக ஆய்வு மேற்கொள்ளும் பொழுது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடையின் விற்பனையாளர் மீது நடவடிக்கை மேற்கொண்டு கடைகளின் உரிமத்தை அபராதம் விதித்து ரத்து செய்ய வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் நன்றாக பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் தற்போது பதிதாக போடப்பட்ட நெடுஞ்சாலை இந்த சாலை பெரியபாளையம் மாநில அமைப்பதில் நிறைய துறை குளறுபடிகள் உள்ளது புதிதாக போடப்படும் சாலை ஏதோ பழைய சாலையை புதுப்பிப்பது போல் ஆங்காங்கே பேட்ச் ஓர்க் செய்யப்படுகிறது மேலும் பல இடங்களில் சாலையின் இரு பக்கங்களிலும் 10 அடிக்கு அதிகமாக பள்ளங்கள் உள்ளன ஒரு சில புகைப்படம் சாலை நடுவே பல இடங்களில் தடுப்புகள் இல்லாமல் நடுவே சென்டர் மீடியேட்டர் அமைக்கப்படுகிறது.
அமைக்கப்பட்ட சென்டர் மீடியேட்டர் தரம் இல்லாமல் அமைக்கப்பட்ட சில தினங்களில் உடைந்து காணப்படுகிறது ஆகவே இது கூர்ந்து சாலையை 5-50 அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி அமைதிட குறித்தும், கழிவு நீர் வாகனத்தில் கொண்டு வரும் கழிவு நீரினை கூவம் ஆற்றில் கொட்டுவதை தடுத்திட வேண்டும் மேலும் கழிவு நீர் வாகன உரிமையாளர்களிடம் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி, ஊராட்சி , வருவாய் துறை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஒன்றினைந்து மாதந்திர ஆய்வு கூட்டம் நடத்தி கூவம் ஆற்றில் கழிவு நீர் கொட்டாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும் மீறி கழிவு நீர் கொட்டப்படுவதை கண்டறிப்பட்டால் வாகனங்களை சீல் வைத்து கைப்பற்றப்படும் நுகர்வோர் பாதுகாப்பு உறுப்பினர்களிடம் மாவட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவியுங்கள் அந்த புகாரின் மனுக்கள் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தொடர்ந்து சட்டஒழுங்கு பிரச்சினை தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் ஆவடி காவல் துணை கண்காணிப்பாளர்களிடம் விவாதிக்கப்பட்டது.
இதில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா,வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்), தீபா (திருத்தணி),மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.