பதிவு:2024-10-04 14:17:52
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம் :
திருவள்ளூர் அக் 04 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தீ தடுப்பு மற்றும் தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள்,ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க கோரும் விண்ணப்பங்களை அரசு விதிகளை முறையாக பின்பற்றி உரிமம் வழங்கவும் அனைத்து கடைகளும் மற்றும் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் முறையாக ஆய்வு செய்து அனுமதி வழங்க சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களும் முறையாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த்,உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்), தீபா (திருத்தணி),மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.