திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் துடிதுடித்து இறக்கும் நாய்கள் : இரவு நேரங்களில் கையில் பக்கெட்டுடன் உலா வந்து நாய்களுக்கு உணவளிக்கும் மர்ம நபர் குறித்த சிசிடிவி வைரல் :

பதிவு:2024-10-04 14:24:47

திருவள்ளூர் அக் 04 : திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 12 மற்றும் 13வது வார்டில் உள்ள ஜெயா நகர், காமாட்சி நகர், காமாட்சி அவென்யு, ஏஎஸ்பி நகர். செந்தில் நகர் பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக சுமார் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் துடிதுடித்து இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏ எஸ் பி நகரில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் வளர்த்திருந்த சுமார் பத்து நாய்களில் 8 நாய்கள் விஷம் வைத்த உணவை உண்டு சிறிது நேரத்தில் இறந்து விட இரண்டு நாய்கள் மட்டும் துடிதுடித்துக் கொண்டிருந்தன. கார்த்திகேயன் அந்த இரண்டு நாய்களை எடுத்துக்கொண்டு சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதில் எட்டு மாதங்கள் நிரம்பிய சில்கி எனும் நாய் விஷத்தின் வீரியம் காரணமாக சிறுநீரகம் செயலிழந்து இறந்து விட்டது.

பிரவுனி எனும் 11 மாதங்கள் ஆன நாய் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளது. விஷ உணவை உண்ட நாய்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக துடிதுடித்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முட்பதர்களில் இறந்து கிடந்துள்ளது. நகராட்சியில் இருந்து தினமும் காலையில் தூய்மை பணி செய்பவர்கள் காருக்கு அடியிலும் முட்புதர்களிலும் நாய்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிகவும் வீரியம் வாய்ந்த விஷத்தை உணவில் கலந்துள்ளதால் எல்லா நாய்களும் ரத்த வாந்தி எடுத்து மூச்சு திணறல் ஏற்பட்டும் இறந்துள்ளதாக கால்நடை மருத்துவமனையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதிகளில் இரவு நேரங்களில் கையில் பக்கெட் உடன் மர்ம நபர் ஒருவர் நாய்களுக்கு உணவு வைக்கும் சிசிடிவி வீடியோவும் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் நாய்களுக்கு விஷம் கலந்த உணவை வைத்து கொன்றவர்கள் யார் என்பது தெரியாமல் உள்ளது. திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் உள்ள முக்கியஸ்தர்கள் வசதியானவர்கள் அதிக வசிக்கும் பகுதிகளில் உள்ளவர்களின் வீடுகளில் கொள்ளை அடிக்க நாய்களுக்கு விஷம் கலந்த உணவை வைக்கிறார்களா என சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.