திருவள்ளூர் ராகவேந்திரா கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் சிறப்பு பூஜை :

பதிவு:2024-10-04 14:26:34

திருவள்ளூர் அக் 04 : திரைப்பட உலகின் ஜாம்பவானான பல ரசிகப் பெருமக்களை கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த நான்கு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்டம் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற திருவள்ளூர் நகரச் செயலாளர் ஆர்.ஜி.,மார்த்தாண்டன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருவள்ளூர் வீரராகவர் கோவில் அருகில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். தொடர்ந்து அவருடைய சிரிப்பை நாங்கள் காண வேண்டும் என்று திருவள்ளூர் நகரச் செயலாளர் ஆர்.ஜி.மார்த்தாண்டன் தெரிவித்தார். இந்த சிறப்பு பூஜையில் ரசிகர்கள் கோபி , பாஸ்கர் ஆனந்த பாபு ,விஜய் பாஸ்கர், மணி பவன், சிவா , பிரகாஷ் ப்ரீத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.