பதிவு:2024-10-07 12:08:08
திருவள்ளூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வென்று, மாநில அளவிலான நடைபெறும் போட்டிக்கு செல்லும் வீரர், வீராங்கனைகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வழி அனுப்பினார் :
திருவள்ளூர் அக் 06 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை மாநில அளவிலான நடைபெறும் போட்டிக்கு செல்லும் வீரர், வீராங்கனைகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் வாழ்த்தி பேருந்தினை வழி அனுப்பினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10.09.2024 முதல் 24.09.2024 வரை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 696 வீரர் வீராங்கனைகள் வருகிற 04.10.2024 முதல் 24.10.2024 வரை மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் சார்பாக மாநில அளவிலான போட்டிகயில் கலந்துக் கொள்ள சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று விளையாட உள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சேது ராஜன், திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், பயிற்றுநர்கள் முத்து செல்வி, (கால்பந்து) ரூபன், (கால்பந்து) லோகேஷ் ( நீச்சல்) மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.