பதிவு:2024-10-07 12:12:00
திருவள்ளூரில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக பல்வேறு துறைகள் அடங்கிய ஆய்வுக்கூட்டம் :
திருவள்ளூர் அக் 06 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக பல்வேறு துறைகள் அடங்கிய மண்டல குழுக்கள், முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்பு குழு , வெளியேற்றுதல் குழு, தற்காலிக தங்கும் முகாம் குழு ஆகிய குழுக்கள் மற்றும் தன்னர்வலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.ஆவடி துணை காவல் ஆணையர்கள் ஐமன் ஜமால், வி.அன்பு (போக்குவரத்து) , மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், திருவள்ளூர் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வை.ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கி வருவதால் அனைத்து துறை அலுவலர்களும் தயார்நிலையில் இருக்க வேண்டும். கடந்த காலங்களில் மிக்ஜாம் புயலினால் பெரும் சேதம் ஏற்பட்டது. தற்பொழுது வடகிழக்கு பருவமழை சராசரி விட அதிகமாக இருக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. ஆகவே பேரிடர் காலங்களில் சுணக்கம் காட்டமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை திறமையாக கையாளவேண்டும். பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு மையத்தில் முன்னெச்சரிக்கை தொடர்பான குழு மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும் மழைக்காலம் வர உள்ளதால் மெட்ரோ வாட்டர் போன்ற தண்ணீர் சம்பந்தமான பணிகளில் சாலைகளில் ஏதாவது பள்ளம் ஏற்பட்டிருந்தால் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட துறையை அணுகி நடவடிக்கை எடுத்து பள்ளத்தினை சரி செய்து தீர்வு காண வேண்டும். மேலும். வெள்ளம் சூழ்கின்ற பகுதிகளுக்கு படகுகளை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பேரிடர் காலங்களில் போது கர்ப்பிணி பெண்கள் யாரவது கண்டறியப்பட்டால் அவர்களை பாதுகாப்பான முறையில் கண்காணித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும் .
தொடர்ந்து, பொன்னேரி ஆண்டார் மடம், திருப்பாலைவனம் திருமண மண்டபங்களில் தங்கப்படும் மக்களுக்கு உணவு, குடிநீர்வசதி, ஜெனரேட்டர், எரிவாயு சிலிண்டர், கழிப்பிட வசதி, மற்றும் அடிப்படை வசதிகளை அந்தந்த வட்டாட்சியர்கள், பி.டி.ஓகள் மற்றும் விஏஓகள் ஏற்படுத்தித் தர வேண்டும் அதேபோல் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் மக்களை தங்க வைக்கும் பாதுகாப்பான இடங்களில் கட்டிடங்கள் தண்ணீர் கசியாதவாறு பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்;. சேதமடைந்த பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களை கணக்கீடு செய்து மழை காலம் வருவதற்கு சரிசெய்து தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆகவே அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணி புரிய வேண்டும் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளை சேதங்கள் இப்பொழுது என்ன நடைமுறைப்படுத்துகிறோம் என்று ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சிறப்பான பணி மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சண்முகவல்லி, மகளிர் திட்ட இயக்குநர்செல்வராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.