பதிவு:2024-10-07 12:14:26
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லத்தூரில் கோவில் சுற்றுச்சுவர் அமைக்க கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல் :
திருவள்ளூர் அக் 06 : திருவள்ளுர் அடுத்த மேல்நல்லாத்தூர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது இக்கோயிலை சுற்றிலும் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடம் உள்ள நிலையில் இந்த இடத்தை சுற்றிலும் கோவில் சார்பில் சுற்று சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்றது
இந்த நிலையில் ஸ்ரீ லட்சுமி நாராயணா பெருமாள் கோயில் பின்புறம் வசிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தன்னுடைய மனைவி மோகனாவுடன் சேர்ந்து தனது வீட்டு அருகே சுற்றுச்சூழல் எழுப்பக் கூடாது நாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கு இடத்தில் வசிப்பதால் இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது எனவே வீட்டு பகுதியில் இருந்து 20 அடி தள்ளி கோவில் சுற்றுச்சூழல் அமைத்துக் கொள்ளுங்கள் என கூறியதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்
ஆனால் இதனை ஏற்க மறுத்த கிராமத்தினர் ஊருக்கு பொதுவாக உள்ள கோவில் சுற்றுச்சூழல் அமைப்பதற்கு இடையூறாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி மோகனா ஆகியோரை கண்டித்து திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தின் போது சாலையில் அமர்ந்திருந்த பெண்களையும் மீறி செல்ல முயன்ற இருசக்கர வாகன ஓட்டிக்கும் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த இளைஞர்களும் இடையே வாக்குவாதம் முற்றி கைகளப்பாகவும் மாறியது இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் கிராம மக்களால் தாக்கப்பட்டார்
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுக்கா காவல் ஆய்வாளர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அரசு புறம்போக்கு இடத்தை அளந்து கோவிலுக்கு சுற்று சுவர் எழுப்ப ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தை பொதுமக்கள் தற்காலிகமாக கைவிட்டனர்,மேல்நல்லாத்தூர் கிராம மக்கள் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.