ஆயத பூஜை, விஜய தசமி, தீபாவளி மற்றம் கிறிஸ்துமஸ் பண்டிகை கால இனிப்பு பலகாரங்கள், காரவகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்திட உரிமம் பெற வேண்டும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-10-07 12:18:37



ஆயத பூஜை, விஜய தசமி, தீபாவளி மற்றம் கிறிஸ்துமஸ் பண்டிகை கால இனிப்பு பலகாரங்கள், காரவகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்திட உரிமம் பெற வேண்டும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

ஆயத பூஜை, விஜய தசமி, தீபாவளி மற்றம் கிறிஸ்துமஸ் பண்டிகை கால இனிப்பு பலகாரங்கள், காரவகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்திட உரிமம் பெற வேண்டும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் அக் 06 : மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் உணவு மற்றும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :

தற்போது பண்டிகை காலம் தொடங்கவுள்ள தமிழ்நாட்டில் அனைத்து விதமான விற்பனைகளும் அதிகரிக்கவுள்ளதால், முக்கியமாக ஆயத பூஜை, தீபாவளி மற்றம் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள். காரவகைள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உணபதும், சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது.

மேலும் தீபாவளி பண்டிகை காரணமாக இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இனிப்பு, காரவகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான முலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. மேலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. இதனை RUCO திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்கவேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு. விபரச்சீட்டு இடும்போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு மற்றும் FSSAI உரிமம்,பதிவு எண் கட்டாயம் குறிப்பிடவேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை உரிமம், பதிவு பெற்றுகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் உணவு தயாரிபாளர்கள் அனைவரும் Fostac பயிற்சியினை பெற்றிருக்கவேண்டும். மேலும் நிரந்தர இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி வைத்திருப்பவர்கள் Hygine Rating (சுகாதார குறியீடு) பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது. உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை பற்றிய விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உணவு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கும்,unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் புகார் அளிக்கலாம். மேலும் கூகுள் பிளேஸ்டோரிலிருந்து உணவு பாதுகாப்புத் துறையின் TN foodsafety consumer App (நுகர்வோர் குறை தீர்ப்பு செயலி)-னை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம். மேலும் கீழ்க்கண்ட முகவரியிலும் தொடர்பு கொண்டு உணவு பற்றிய தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.