திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சொத்துவரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, உள்ளிட்டவைகள கண்டித்து மனித சங்கிலி போராட்டம் :

பதிவு:2024-10-09 11:11:56



திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சொத்துவரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, உள்ளிட்டவைகள கண்டித்து மனித சங்கிலி போராட்டம் :

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சொத்துவரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு  சீர்குலைவு, உள்ளிட்டவைகள கண்டித்து மனித சங்கிலி போராட்டம் :

திருவள்ளூர் அக் 09 : தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி. வி ரமணா தலைமையில் திருவள்ளூர் நகராட்சியில் விலைவாசி உயர்வு , சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்ற பல்வேறு வரிகளை உயர்த்தியதை கண்டித்தும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு வழி வகுத்ததை கண்டித்தும் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்தும் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை திமுக அரசுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மெரினா கடற்கரையில் சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்ததற்கு திராணி இல்லாத அரசாக திமுக விளங்குவதாகவும், கூட்டங்கள் நடத்தும் போது ஆயிரம் கண்டிஷன் போடும் விடியா திமுக அரசு. 15 லட்சம் பேர் கூடும் மெரினாவில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யாமல் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். இதனால் தான் 5 பேர் உயிரிழந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இந்த 5 பேரின் மரணம் இந்த ஆட்சிக்கு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் சாவு மணி அடிக்கும் என பகிரங்கமாக எச்சரித்தார். தமிழக வெற்றிக் கழகம்சார்பில் மாநாட்டிற்கு ஆயிரம் கண்டிஷன் போட்டிருக்கிறார்கள்.

ஆனால் இது போன்ற உயிரிழிப்பு ஏற்படும் வகையில் அந்த மாநாடு இருக்காது என தெரிவித்தார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் நகர செயலாளர் கந்தசாமி, முன்னாள் அரசு வழக்கறிஞர் வி.ஆர்.ராம்குமார், திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் சக்திவேல், பூண்டி ஒன்றிய் செயலாளர் மாதவன், அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் கே.பி.எம்.எழிலரசன், எம்ஜிஆர் இளைஞர் அணி அவைத் தலைவர் எஸ்.ஏ.நேசன்,எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் ச.ஞானகுமார், கடம்பத்தூர் ஒன்றிய அவைத் தலைவர் சிற்றம் சீனிவாசன், நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், ஆனந்தி சந்திரசேகர், சேலை ஊராட்சி மன்றத் தலைவர் கோவர்த்தனம், திருவள்ளூர் நகர பொருளாளர் துக்காராம், நிர்வாகிகள் ஜெயாநகர் குமரேசன், கோட்டீஸ்வரன், பாலாஜி, , திலகவதி, அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் வெங்கடேசன், செயலாளர் சண்முகம், தலைவர் கமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.