காக்களூர் பைபாஸ் சாலையில் சாவியை இருசக்கர வாகனத்திலேயே விட்டு விட்டு டிவி ஷோரூமுக்குள் சென்ற நபரின் இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் வீடியோ வைரல் : போலீசார் விசாரணை :

பதிவு:2024-10-09 11:14:06

திருவள்ளூர் அக் 09 : திருவள்ளூர் காக்களூர் சாலையில் உள்ள டார்லிங் டிவி ஷோரூம் முன்பு கடந்த மூன்றாம் தேதி இரவு மணவாள நகர் சிறுதொண்டன் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த முருகன்(47) என்பவர் தனது குழந்தைகளுடன் டிவி வாங்குவதற்காக ஷோரூமுக்கு வந்துள்ளார். அப்போது குழந்தைகள் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி ஷோரூம் ஓடவே வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்கள் பின்னாலேயே ஷோ-ரூமிற்குள் முருகன் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வாகனத்திலேயே சாவி விட்டுவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்து அதிர்ந்து போய் வெளியே வந்து பார்த்தபோது தனது இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.

இதை அடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோது அவ்வழியே செல்லும் இளைஞர் ஒருவர் அங்கும் இங்கும் நடப்பதும், மீண்டும் இருசக்கர வாகனத்தை கடந்து வந்து சிறு தூரத்தில் நின்று கொண்டு வாகனத்தையும் கடையையும் நோட்டமிட்டு ஆட்கள் யாரும் இல்லை என உறுதி செய்த பின்பு இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் தாலுகா காவல்துறையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மணவாளநகர் அரசு மருத்துவமனை தேரடி உள்ளிட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மாயமாகி வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே காவல்துறையினர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.