கடம்பத்தூரில் கோவில்களில் பூசாரிகள் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்த வேண்டும் என பூசாரிகள் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம் :

பதிவு:2024-10-09 11:19:02



கடம்பத்தூரில் கோவில்களில் பூசாரிகள் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்த வேண்டும் என பூசாரிகள் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம் :

கடம்பத்தூரில் கோவில்களில் பூசாரிகள் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்த வேண்டும் என பூசாரிகள் நலச்சங்க மாநாட்டில் தீர்மானம் :

திருவள்ளூர் அக் 09 : திருவள்ளூர் அடுத்த கடம்பத்துார் தனியார் திருமண மண்டபத்தில் கோவில் பூசாரிகளின் நலச்சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் கோவில் பூசாரிகள் நலச்சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார் .இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவரும், தமிழ்நாடு அரசு பூசாரிகள் ஓய்வூதியத் தேர்வுக்குழு உறுப்பினருமான பி.வாசு, மாநில பொருளாளர் கே.சுந்தரம், செயலாளர் எஸ்.சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் முருகன் திருக்கோவில்களில் பணியாற்றும் பூசாரிகள் 10 பேருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவிக்க வேண்டுமென பழனியில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்புக்குரியது.

இதேபோல் அம்மன் மற்றும் சைவம், வைணவம் என பாகுபாடு காட்டாமல் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக பணியாற்றும் பூசாரிகளுக்கு விருது வழங்க வேண்டும்.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒருகால பூஜை நடைபெறும் கோவில்களில் பணியாற்றும் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக உயர்த்த வேண்டும்.முதிய பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தொகையை 5 ஆயிரம் ரூபாயாகவும், கிராமப்புற முதிய பூசாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்.

பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கு வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்க கட்டாயப்படுத்தக்கூடாது.நலத்திட்ட உதவிகளை பெற உச்சவரம்பை ஒரு லட்சமாக உயரத்த வேண்டும்.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு சிறுதொழில் துவங்க வட்டி இல்லா கடனுதவியை வங்கிகள் மூலம் மூன்று லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.ஹித்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில் மாவட்ட பொருளாளர் மௌரி அம்மன், மாவட்டச் செயலாளர் ஜெகதீஷ் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை என பல மாவட்டங்களைச் சேர்ந்த பூசாரிகள் கலந்து கொண்டனர்.