பதிவு:2024-10-09 11:20:15
காக்களூர் தொழிற்பேட்டையில் காலி தொழில்மனை 1 ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளது : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் அக் 09 : திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டம் காக்களூர் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான காக்களூர் தொழிற்பேட்டையில் காலி தொழில்மனை 1 ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளது.
புதிதாக தொழில் தொடங்க தொழிற்மனைகளை விரும்புவோர் http://www.tansidco.tn.gov.in வாங்க இணையதளம் வாயிலாக தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் தமிழ்நாட்டில் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளின் காலிமனைகள் இணையதளத்தின் வாயிலாகவே விவரங்களை தெரிந்து கொண்டு தேவையானவற்றை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த காலி தொழில்மனைகளை பார்வையிட காக்களூர் சிட்கோ கிளை அலுவலக கிளை மேலாளர் ம.மகேஸ்வரி,கைபேசி எண்: 9445006568, மின்னஞ்சல் : bmkklr@tansidco.org என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.