பதிவு:2024-10-09 11:21:51
திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பாபருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் அக் 09 : திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பாபருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்த அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியாலிட் என்ற காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க நடப்பு சம்பா பருவம் 2024-25-ல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு நவம்பர் 15 ஆம் தேதிக்குள் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அவர்களின் விருப்பத்தின் பேரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மைங்களிலும் காப்பீடு செய்துகொள்ளலாம்.
ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு காப்பீடு தொகையாக ரூ.518 செலுத்த வேண்டும். நடப்பு பருவ அடங்கல் ,கணிணி சிட்டா, உபயோகத்தில் உள்ள வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் நகல் ஆகியவற்றுடன்; விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளுக்கு முன்னதாகவே காப்பீடு செய்துகொள்ளலாம். மேலும், பதிவு செய்தவுடன் பதிவு செய்த விவசாயின் பெயர், முகவரி, பயிரின் பெயர், பயிரிட்டுள்ள நிலம் உள்ள கிராமம், வங்கி கணக்கு எண் மற்றும் பயிரிட்டுள்ள பரப்பு ஆகிய விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெதிவித்தார்.