பதிவு:2024-10-10 11:13:23
ஆவடியில் 17,427 வீட்டுமனை பட்டாக்களுக்கான ஆணைகள் : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் :
திருவள்ளூர் அக் 10 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில்17,427 வீட்டுமனை பட்டாக்களுக்கானஆணைகளை பயனாளிகளுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் பட்டா வழங்குவதில் மற்றும் பட்டாக்களை வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்வதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணுவது குறித்து தொடர்புடைய துறைத் தலைவர்களுக்கும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன்படி, துறைத் தலைவர்கள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அலுவலர்கள் இணைந்து பணிகளை மேற்கொண்டதன் அடிப்படையில், ஆவடி நகர நில அளவை திட்டத்தின் கீழ் 15,942 பட்டாக்களும் நத்தம் கணினிமயமாக்கும் திட்டத்தின் கீழ் 500 பட்டாக்களும் வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 567 பட்டாக்களும்,ஆதிதிராவிடர்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும்பிற்படுத்தப்பட்டோர் பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 318 பட்டாக்களும் மற்றும் சமத்துவபுரத்தில் பயணாளிகள் பெயரில் 100 பட்டாக்களும், ஆக மொத்தம் 17,427 பட்டாக்கள் பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆவடி சட்டமன்ற தொகுதியில்16,112 நபர்களும், திருத்தனி தொகுதியில் 218 நபர்களும், திருவள்ளூர் தொகுதியில் 200 நபர்களும், கும்மிடிபூண்டி தொகுதியில் 226 நபர்களும், பூவிருந்தவல்லி தொகுதியில் 372 நபர்களும், பொன்னேரி தொகுதியில்74 நபர்களும், மாதவரம் தொகுதியில் 200 நபர்களும் மற்றும் மதுரவாயல் தொகுதியில் 25 நபர்களும் ஆக மொத்தம்17,427நபர்கள் பயன்பெற உள்ளார்கள்.
மகளிருக்கான விடியல் பேருந்து பயண திட்டத்தின் மூலமாக 520 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மகளிர் மாதத்தோறும் ரூ.900 சேமிக்கின்றனர். காலை உணவுத் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 20 இலட்சம் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.புதுமைப்பெண் திட்டத்தின் வாயிலாக அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 3 இலட்சத்து 25 ஆயிரம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்விபயிலும் 3 இலட்சத்திற்கு அதிகமான மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறினார். பின்னர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் 1,200வீட்டுமனைப் பட்டாக்களுக்கானஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மை துறை அரசு முதன்மைச் செயலர் பெ.அமுதா, சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அரசு செயலாளர் தரேஸ் அகமது, சென்னை நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி, நில அளவை மற்றும் நிலவரித் திட்டம்உறுப்பினர் செயலர் மற்றும் சிறப்புபணி அலுவலர் சிறப்பு பிரிவு சென்னை வீட்டுமனை பட்டா திட்ட இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர்,ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆவடி காவல் ஆணையர் சங்கர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி,மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.