திருவள்ளுரில் விஷம் வைத்து கொல்லப்பட்ட தெரு நாய்களின் உடல்களை அரசு கால்நடை மருத்துவர்கள் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்தனர் :

பதிவு:2024-10-10 11:15:08

திருவள்ளூர் அக் 10 : திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 12 மற்றும் 13 வது வார்டுகளில் உள்ள ஜெயா நகர், காமாட்சி நகர் , காமாட்சி அவென்யூ. ஏ.எஸ்.பி. நகர், செந்தில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக விஷம் கலந்த உணவை சாப்பிட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ரத்த வாந்தி எடுத்து இறந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி களை ஆய்வு செய்ததில் திருவள்ளுர் மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் நிர்வாகி வெற்றிவேந்தன் அத்தகைய நாய்களுக்கு பிரியாணியில் விஷம் கலந்த உணவை நாய்களுக்கு வைத்து கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து வெற்றி வேந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் நாய்களை பராமரித்து வந்த கார்த்திகேயன் என்பவரின் வீட்டின் தோட்டத்திற்குள் இறந்த நாய்களை புதைத்திருந்தார்.

மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் புதைக்கப்பட்ட நாய்களை திருவள்ளூர் கால்நடை மருத்துவமனையின் மருத்துவர் உமா தலைமையில் மருத்துவர் விஷ்வேந்தர் உள்ளிட்டோர் நாய்களின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்தனர்.இந்த பரிசோதனை முடிவில் எந்த மாதிரியான விஷம் உணவில் கலக்கப்பட்டது என்ற விவரம் தெரிய வரும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.மருத்துவர்களின் விரிவான அறிக்கைக்குப் பிறகே வெற்றிவேந்தன் மீதான வழக்கு மேலும் சூடு பிடிக்கும் என தெரிகிறது.