பெரியகுப்பம் அருள்மிகு மூங்காத்தம்மன் நவராத்திரி விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மனாக பக்தர்களை அருள்பாலித்தார் :

பதிவு:2024-10-10 11:16:56

பெரியகுப்பம் அருள்மிகு மூங்காத்தம்மன் நவராத்திரி விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மனாக பக்தர்களை அருள்பாலித்தார் :

பெரியகுப்பம் அருள்மிகு மூங்காத்தம்மன் நவராத்திரி விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மனாக பக்தர்களை அருள்பாலித்தார் :

திருவள்ளூர் அக் 10 : நவராத்திரியின் ஒன்பது நாள்களும் துர்காதேவியின் அவதாரங்களை வழிபாடு செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த 9 நாள்களிலும் பக்தர்கள் வித்தியாசமான நிகழ்வை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீமூங்காத்தம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நவராத்திரி 6 ஆவது நாள் அருள்மிகு மூங்காத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மனாக பக்தர்களை அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து ஆலயத்தில் பரதநாட்டியம் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அப்பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்று பரதநாட்டியம் அரங்கேற்றினார்கள். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.