திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகையில்லா இளைய சமுதாயத்தை உருவாக்குவது தொடர்பாக விழிப்புணர்வு பேரணி : உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ்குப்தா கொடியசைத்து துவக்கி வைத்தார் :

பதிவு:2024-10-12 19:22:40

திருவள்ளூர் அக் 11 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகையில்லா இளைய சமுதாயத்தை உருவாக்குவது தொடர்பாக மாணவ, மாணவியர்கள் பங்குப் பெற்ற விழிப்புணர்வு பேரணியினை உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ்குப்தா கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்திலின்படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புகையிலையில்லா இளைய சமுதாயத்தை உருவாக்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து ஞான வித்யாலயா பள்ளி வரை சென்றது. இப்பேரணியில் 300 மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். ஆகவே புகையிலையில்லா இளைய சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் என உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ்குப்தா தெரிவித்தார்.

முன்னதாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் புகையிலை தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்

இதில் மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் மோகன், மாவட்ட கொள்ளை நோய் அலுவலர் அருண்பதி, மாவட்ட மலேரியா அலுவலர் மதியழகன், மாவட்ட நலக் கல்வியாளர் கணேசன், ஈக்காடு வட்டார மருத்துவ அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் பவித்ராதேவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்,