பதிவு:2024-10-12 19:24:18
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டில் அண்ணா ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் பா பெஞ்சமின் பங்கேற்று திறந்து வைத்தார் :
திருவள்ளூர் அக் 11 : திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா ஆட்டோ ஓட்டுனர் சங்க கிளை திறப்பு விழா நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி பொருளாளர் எம்.ஜே. ரகுபதி ஏற்பாட்டில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணன், திருவள்ளூர் ஒன்றிய செயலாளர்கள் புட்லூர் ஆர். சந்திரசேகர், டி. பூங்கோவன் மாவட்ட பிரதிநிதி பி. சந்திரன் முன்னிலையில் அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா. பென்ஜமினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெயர் பலகையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஆட்டோ ஓட்டுநர்களுக்கான அடையாள அட்டை வழங்கினார். இதில் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் ஆனந்தகுமார், விக்ரம், விஜயகுமார், பூகாந்தன், திவாகர், பிரசாந்த், சரத்குமார், ஜெபராஜ், ஆர் ரமேஷ், சுனில் மற்றும் உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, குமரேசன், முகுந்தன், அரி பிரசாத், விஷால், வைரமுத்து, சிண்டு, குமரன், சுகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.