மாணவ, மாணவிகள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள புத்தகங்களையும், உடல் நலத்தை பாதுகாக்க விளையாட்டிலும் ஈடுபடுவது அவசியம் : முதியோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் சின்னச்சாமி தெரிவித்தார் :

பதிவு:2024-10-12 19:25:59

திருவள்ளூர் அக் 11 : திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையில் வேலம்மாள் வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் 28-ஆவது ஆண்டு விளையாட்டு விழாவையொட்டி திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 5 நாள்களாக நடைபெற்றது. இதில் தடகளம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கால்பந்து, கோ}கோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் 3 பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.பின்னர் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சுடலை முத்துபாண்டியன் தலைமை வகித்தார். இதில் முதல்வர் எஸ். சதீஷ் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளாராக முதியோர் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் சின்னச்சாமி பங்கேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் கோப்பையையும் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிப்பருவத்தில் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகமல் இருக்க விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போதும், அதற்கான பயிற்சிகளின் போதும் மூளை வேகமாக செயல்பட்டு கற்றல் திறனை மேம்படுத்தும். விளையாட்டு உடல் நலத்திற்கு பாதுகாப்பு அளிக்கும். விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தோல்வியால் ஏற்பட்ட அனுபவங்களை பாடமாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள புத்தகத்தையும், உடல் நலனை பாதுகாக்க விளையாட்டையும் நேசிக்கவும் என மாணவ, மாணவிகளுக்கு அவர் தெரிவித்தார்.