திருவள்ளூரில் இருந்து திருத்தணி சென்ற அரசு பேருந்தில் டயர்களை ஏற்றி சென்று வழியில் எங்கும் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் அவதி : போக்குவரத்து துறையின் அலட்சியம் என குற்றச்சாட்டு :

பதிவு:2024-10-12 19:30:42

திருவள்ளூர் அக் 11 : திருவள்ளூர் பணிமனையில் இருந்து மாலை 6 மணி அளவில் திருத்தணி வரை செல்லக்கூடிய கூடிய பேருந்து புறப்பட்டது. அதில் பழைய டயர்களை பொதுமக்கள் பயணிக்க கூடிய பேருந்தில் ஏற்றிக்கொண்டு திருத்தணி பணிமனைக்கு சென்றது. அந்தப் பேருந்தில் முன்பக்கம் ஒரு ஐந்து பேர் பின்புறம் ஒரு ஐந்து பேரை ஏற்றிக்கொண்டு திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திருவள்ளூருக்கும் திருத்தணிக்கும் இடைப்பட்ட வழியில் நிற்பவர்கள் ஏற முயற்சித்தனர்.

ஆனால் பேருந்து முழுவதும் டயர்கள் அடுக்கி வைத்திருந்ததால் பேருந்து நிற்காமல் சென்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அரசு பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்க கூடிய வகையில் இருந்த பேருந்தில் பேருந்தின் உதிரி பாகங்களை ஏற்றி சென்றது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. அது மட்டுமல்லாமல் டயர்களை ஏற்றி செல்ல அதற்கான வாகனத்தில் செல்லாமல் பயணிகளை ஏற்றி செல்லும் பேருந்தில் ஏற்றி சென்றது விடியோ தி மு க அரசின் அலட்சியத்தையும் கையாளாகாத தனத்தையும் காட்டுவதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.