பதிவு:2024-10-17 10:27:09
வடகிழக்கு பருவமழை கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மழைநீரினை வெளியேற்றும் பணியை நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே. என். நேரு பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் அக் 16 : ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணன் ஊர் ரயில்வே பாலம் கீழ் ஆவடியில் இருந்து அம்பத்தூர் ஏரிக்குச் செல்லும் வரத்து கால்வாயில் இருந்து மழைநீர் வெளியேற்றும் பணயையும், , சேக்காடு தரைப்பாலம் வழியாக மழைநீர் வெளியேற்றும் பணியும், மாநகராட்சி அருகே உள்ள காமராஜர் நகர் பகுதி, பூவிருந்தவல்லி சென்னீர்குப்பம், பெரியார் நகர், 15 வார்டு கோ - வா ஆப்ரேட்டிவ் நகர், போன்ற பல்வேறு இடங்களை வடகிழக்கு பருவமழை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் கே .என். நேரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
ஆவடி மாநகராட்சி மெயின் ரோட்டில் தண்ணி நிக்குது சாப்வேயில் 15 அடி வாய்க்கால் வெட்டினால் ரூ.3 கோடி செலவாகும் அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹவுசிங் போர்டில் 15 அடி அகலத்தில் கட்டிடம் ஒன்று கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள் அதற்கு ரூ. 20 கோடி செலவாகும் இரண்டும் சேர்த்து ரூ.23 கோடி முதலமைச்சரின் அனுமதியோடு வாங்கி கொடுக்கப்படும். ஆவடியில் இனிமேல் தண்ணீர் நிற்காது. அடுத்து பீட்டர் காலேஜ் பக்கம் ஒரு கால்வாயில் ஆக்கிரமிப்பு இருக்கிறது. அதையும் எடுத்து விட்டால் இந்த மூன்று வேலையும் முடிந்த பிறகு தண்ணீர் நிற்காது.
மாவட்ட ஆட்சியர் அதை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வார். ரயில்வே பிரிட்ஜ் பக்கத்தில் தேவையான அளவு குழாய்கள் பதிக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது வருங்காலத்தில் ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்றாலும் கூட எந்த பிரச்சனையும் வராது அந்த அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே .என். நேரு தெரிவித்தார்.
இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர், மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர், திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் இயக்குநர் வேளாண்மை துறை பி. முருகேஷ், ஆவடி மாநகராட்சி மேயர் கு. உதயகுமார், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையர் ச. கந்தசாமி, ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், ஆவடி மாநகராட்சி மண்டல தலைவர்கள், பூவிருந்தவல்லி,திருவேற்காடு நகர் மன்ற தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.