வடகிழக்கு பருவமழை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள் : அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆய்வு

பதிவு:2024-10-17 10:28:55



வடகிழக்கு பருவமழை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள் : அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள் : அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆய்வு

திருவள்ளூர் அக் 16 : வடகிழக்கு பருவமழை கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வழி தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கொட்டும் மழையில் நேரில் பார்வையிட்டு வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி 47 வது வார்டு ஸ்ரீராம் நகர் பகுதியில் பருவமழையால் தேங்கியிருக்கும் தண்ணீர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வழி தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கொட்டும் மழையில் நேரில் பார்வையிட்டு வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி ராஜாங்க்குப்பம் எஸ்.பி நகர் குடியிருப்பு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வழி தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்டு சாலை மற்றும் கால்வாய்கள் தேங்கியிருக்கும் மழை நீரை பார்வையிட்டு அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

பின்னர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொக்குட்பட்ட மாநகராட்சி 37 வது வார்டு சேர்க்காடு பகுதியில் பருவமழையால் வெள்ள தடுப்பு பணிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வழி தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு மழை நீர் வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வுகளில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார்,ஆவடி மாநகர் ஆணையர் கந்தசாமி, மண்டல குழு தலைவர் ஜி.ராஜேந்திரன், ஆவடி பகுதி கழகச் செயலாளர் நாராயண பிரசாந்த்,நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி மற்றும் அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் வட்டக் கழகச் செயலாளர்கள்,நகராட்சி அதிகாரிகள்,நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.