பதிவு:2024-10-17 10:31:27
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11757 மில்லியன் கனடியில் தற்போது 4303 மில்லியன் கன அடி நீர் இருப்பு : நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் :
திருவள்ளூர் அக் 16 : திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை தொடங்கி மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் எனவும், ரெட் அலர்ட்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கன மழை கொட்டி தீர்த்தது.
அதனைத் தொடர்ந்து காலை முதல் இரவு 8 மணி வரை பரவலாக மழை பெய்ததால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.அதன்படி சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 349 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர் வரத்து 720 கன அடி. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 277 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2252 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர் வரத்து 4326 கன அடி. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 219 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 1429 மில்லியன் கன அடி. யாகவும் உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 1261 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர் வரத்து 1065 கன அடி. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 134 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 302 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர் வரத்து 60 கன அடியாக உள்ளது. சென்னை மக்களின் தேவைக்காக 10 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.ஆக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 11 757 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 4,303 மில்லியன் கன அடியாக உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.