பதிவு:2024-10-17 10:33:43
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நிலவரப்படி மொத்தம் 1866.80 மி.மீ. மழை : சராசரியாக 124.45 மி.மீ. மழை பெய்துள்ளது :
திருவள்ளூர் அக் 16 : வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக கனமழைக் கொட்டி தீர்த்தது. அதன்படி சோழவரத்தில் அதிகபட்சமாக 302.60 மி.மீ. மழையும், செங்குன்றத்தில் 279.20 மி.மீ. மழையும், ஆவடியில் 255 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
மேலும் கும்மிடிப்பூண்டி - 95 மி.மீ., பள்ளிப்பட்டு - 71 மி.மீ., ஆர்கே பேட்டை - 32 மி.மீ., பொன்னேரி - 158 மி.மீ., ஜமீன் கொரட்டூர் - 77 மி.மீ., பூந்தமல்லி - 85 மி.மீ., திருவாலங்காடு - 41 மி.மீ., திருத்தணி - 72 மி.மீ., பூண்டி - 60 மி.மீ., தாமரைப்பாக்கம் - 156 மி.மீ., திருவள்ளூர் - 90 மி.மீ., ஊத்துக்கோட்டை - 93 மி.மீ. என மொத்தம் 1866.80 மி.மீ. மழையும், சராசரியாக 124.45 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது.மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.