உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் சார்பில் போதை இல்லாத திருவள்ளூர் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

பதிவு:2022-05-31 15:33:12

திருவள்ளூரில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு செவிலியர் மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காமராஜர் சிலை அருகில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதை உபயோகிப்பவர்கள் மட்டுமல்லாது அதில் உள்ளவர்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு செவிலியர் கல்லூரி மாணவிகள் சென்றனர்.

இதில் திருவள்ளூர் நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன்,கவுன்சிலர்கள் செல்வகுமார்,அருணா,ஜெய் கிருஷ்ணா, பிரபா மற்றும் பிரம்மகுமாரிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த பேரணியில் பங்கேற்று புகையிலையை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.