திருவள்ளூர் அருகே கோவில் குளத்தில் குளிக்க சென்ற கணவர் நீரில் மூழ்கி பலி : மனைவி போலீசில் புகார் :

பதிவு:2024-10-17 10:35:28

திருவள்ளூர் அருகே கோவில் குளத்தில் குளிக்க சென்ற கணவர் நீரில் மூழ்கி பலி : மனைவி போலீசில் புகார் :

திருவள்ளூர் அருகே கோவில் குளத்தில் குளிக்க சென்ற கணவர் நீரில் மூழ்கி பலி : மனைவி போலீசில் புகார் :

திருவள்ளூர் அக் 16 : பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரீட்டாதேவி (38) இவரது கணவர் வினோத் காஹர் (45).இவர்கள் தங்களது குழந்தைகளுடன் 12 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்தவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு கிராமத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் தொடுகாட்டில் உள்ள பொன்னியம்மன் கோவில் குளத்தில் வினோத் காஹர் குளிக்க சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் இவரது மனைவி ரீட்டாதேவி அக்கம் பக்கத்தில் விசாரித்து தேடிப் பார்த்துள்ளார்.

இந்நிலையில் இரவு 7 மணி அளவில் பொன்னியம்மன் கோவில் குளத்தில் வினோத் காஹர் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.