ஏழ்மை நிலையிலுள்ள பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் 40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-10-17 10:37:25



ஏழ்மை நிலையிலுள்ள பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் 40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

ஏழ்மை நிலையிலுள்ள பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் 40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் அக் 16 : தமிழக அரசால் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக, 2024-25 ஆம் நிதி ஆண்டில், ஒன்றியத்திற்கு தலா 100 பயனாளிகள் வீதம் 38700 ஏழ்மை நிலையிலுள்ள கணவரை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டுக் கோழிக்குஞ்சுகள் (ஒருவருக்கு 40 கோழிக் குஞ்சுகள்) 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதன் படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் ஒன்றியத்திற்கு தலா 100 பயனாளிகள் வீதம் 1400 பயனாளிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் தேர்வு செய்யப்படும் பயனாளி ஏழ்மை நிலையிலுள்ள பெண்ணாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளி அந்தக் கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வமுள்ளவராகவும் இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அதே வேளையில் முந்தைய ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இலவச கறவை மாடு, ஆடு, செம்மறி ஆடு திட்டம் அல்லது கோழிப்பண்ணை திட்டங்களில் பயனடைந்தவராக இருக்கக் கூடாது.

மேலும் தேர்வு செய்யப்படும் பயனாளி ரூ.3200 சொந்த செலவில் நாட்டுக் கோழிக்குஞ்சுகள் கொள்முதல் செய்திடும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். நாட்டுக் கோழிக்குஞ்சுகள் கொள்முதல் செய்து, அதற்கான சுய சான்றுடன் கூடிய இரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன் 50 சதவீத மானியத் தொகையாக ரூ.1600 அவரது வங்கி கணக்கில் செலுத்தப்படும். எனவே மேற்காணும் நெறிமுறைகளின் படி இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண் பயனாளிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பித்து, பயன்பெற என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.