பதிவு:2024-10-17 10:41:02
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருது : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் அக் 16 : உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகளை முதல்வர் 03.12.2024 அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்க உள்ளார்.
அதன்படி சிறந்த பணியாளர், சுயதொழில் புரிபவர் கை,கால் பாதிக்கப்பட்டோர் அல்லது தொழுநோயிலிருந்து குணடடைந்தோர்,பார்வைதிறன் பாதிக்கப்பட்டோர்,செவித்திறன் பாதிக்கப்பட்டோர்,அறிவுசார் குறையுடையோ, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, சிந்தனையற்றோர்,குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு,மன நோய், இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு,இரத்த அழிவுச்சோகை,அரிவாளனு இரத்தச் சோகை,நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு பண்முகக் கடினமாதல்,நடுக்கு வாதம்,பல்வகை குறைபாடு (10 விருதுகள் - 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்), ஹெலன் கெல்லர் விருது - (பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்கள் - தலா ஒரு விருது.) (2 விருதுகள் - 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்), சிறந்த ஆசிரியர் - (அறிவுசார் குறைபாடுடையயோருக்கு கற்பித்தல்) (1 விருது - 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்) https://awards.tn.gov.in’’ என்ற வலைத்தளம் மூலமாக விண்ணப்பங்களை 28.10.2024க்குள் விண்ணப்பிக்குமாறும் அதன் இரண்டு நகல்களை திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.