பதிவு:2024-10-17 10:43:10
வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கியுள்ள முகாமிற்கு அமைச்சர் சா.மு.நாசர் நேரடியாக சென்று உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார் :
திருவள்ளூர் அக் 17 : திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2024 பொதுமக்கள் தங்கியுள்ள முகாம் திருவள்ளூர் அதிகத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமாரகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செருக்கனூர் மதுரா பங்களாமேடு டியூசன் சென்டர் ஆகிய பள்ளிகளில் புயல் பாதுகாப்பு முகாமில் தங்கி உள்ள பொதுமக்களை சந்தித்து உணவு மற்றும் நிவாரண பொருட்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2024 பல்வேறு கட்ட வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அழைத்து வரப்பட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன இதுவரை 62 முகாம்களில் 1086 குடும்பங்களைச் சேர்ந்த 2999 இதில் 998 ஆண்களும் 1220 பெண்களும் 781 குழந்தைகளும் அடங்குவார்கள் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்கள் பாய், போர்வை மற்றும் மருத்துவ உபகரணங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவுக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் சிறப்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர், மாவட்ட கண்காணிப்பாளர் ப. முருகேஷ், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை. ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்), தீபா (திருத்தணி) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.