ஆவடி மாநகராட்சி கோவில் பதாகை ஏரி, கணபதி நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளத் தடுப்புப் பணிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு :

பதிவு:2024-10-20 17:48:06



ஆவடி மாநகராட்சி கோவில் பதாகை ஏரி, கணபதி நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளத் தடுப்புப் பணிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு :

ஆவடி மாநகராட்சி கோவில் பதாகை ஏரி, கணபதி நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளத் தடுப்புப் பணிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு :

திருவள்ளூர் அக் 18 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி கோவில் பதாகை ஏரி, கணபதி நகர் ஆகிய பகுதிகளில் வெள்ளத் தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.

ஆவடி மாநகராட்சி அதிக அளவு காடு நீர் நிலைகள் அதிகம் உள்ள பகுதியாகும்.ஆகவே நீர்வழித்தடமும் அதிகம் உள்ள பகுதியாக திகழ்கிறது. இந்த கோயில் பதாகை ஏரியின் கொள்ளளவு 80 மில்லியன் கன அடியாக உள்ளது. பொதுவாக ஏரியிலிருந்து இரண்டு விதமாக வெளியேற்றுவர்கள் . ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை கால்வாயின் வழியாக கிளை வாய்க்காலுக்கு சென்று அடுத்த ஏரிக்கு தண்ணீர் சென்றடையும்.

ஆனால் இந்த கோயில் பதாகை ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் முதலில் தனியார் பட்டா பாசன விவசாய நிலத்திற்கு சென்று அடுத்தபடியாக ஏரிக்கு செல்கிறது. இதுதான் இந்த ஏரியின் பிரச்சனையாக உள்ளது. ஆகவே இந்த ஏரியிலிருந்து வெளியேறும் நீரினை கடத்துவது சவாலாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆவடி மாநகராட்சி பகுதி முழுவதும் தண்ணீரை வெளியேற்றும் பணி சவாலாக உள்ளது.

தற்போது மாநகராட்சி ஆணையர், மேயர், நீர்வளத்துறை ஆகியோருடன் ஆலோசனை போது இங்கிருந்து வெளியேறும் நீரினை கிருஷ்ணர் நீர் கால்வாய்க்கு கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம். உடனடியாக அதற்கான பணி மேற்கொள்ளப்படும். கடந்த இரண்டு தினம் புயலால் பெய்த கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது அதனை அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக வெள்ள தடுப்பு பணிகளில் ஈடுபட்டு 62 முகாம்களில் 3200 மேற்பட்ட பொதுமக்களுக்கு ஆறு வேலை உணவளித்து பாதுகாப்பாக வைத்து புயலை சிறப்பாக கையாண்டோம்.

ஆனாலும். இந்த கனமழையின் போது சில பாடங்களை கற்றுள்ளோம். இனி வருகின்ற புயலில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தற்பொழுது ஆவடி மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொண்டு. நீர்நிலை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே இனி வரும் மழைக்காலங்களில் கோயில் பதாகை ஏரிலிருந்து வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு பணிகள் மேற்கொள்ள உள்ளோம். மேலும் அடுத்து வரும் மலைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத் தடுப்பு பணிகளை கையாளுவதற்கு அனைத்து அலுவலர்களும் தயாராக உள்ளோம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்தார்.

இதில் ஆவடி மாநகராட்சி மேயர் கு. உதயகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் ச. கந்தசாமி, துணை ஆணையர்கள் சஙகரன், மாரிச்செல்வி,1 வது மண்டல தலைவர் அம்மு பொன்னு வில்சன், உதவி செயற்பொறியாளர் சத்தியநாராயணன், மாமன்ற உறுப்பினர் ரவி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.