பதிவு:2024-10-20 17:50:55
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பழைய பிணவறை அருகே சுத்தம் செய்த போது மின்சார ஒயர் துண்டிக்கப்பட்டதால் தீ விபத்து : குழந்தைகள் வார்டில் புகை புகுந்ததால் அதிர்ச்சி :
திருவள்ளூர் அக் 18 : திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் பழைய பிணவறை அருகே மருத்துவமனை குப்பை கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர்.இந்நிலையில் இந்த குப்பையை நேற்று மாலை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது மின்சார ஒயர் துண்டாகி தீ பரவியது.
இதனால் மருத்துவக் கழிவு குப்பைகள் இருந்ததால் அதில் தீப்பற்றி அதிலிருந்து வெளியேறிய புகை குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தில் புகுந்துள்ளது.இதனால் பச்சிளம் குழந்தைகள் வைத்துள்ள தாய்மார்கள் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். இதனால் குழந்தைகள் நலப் பிரிவு கட்டிடத்தில் இருந்த தாய்மார்கள் உறவினர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.