ரூ.15 கோடி மதிப்பீட்டில் வெள்ளிவாயல், இடையான்சாவடி, சடையான்குப்பம், மணலி புதுநகர் ஆகிய வழியாக செல்லும் கொசஸ்தலையாற்றின் கரைகளை மறுசீரமைப்பு மற்றும் புதியகரை அமைக்கும் பணி

பதிவு:2022-06-01 05:16:21



ரூ.15 கோடி மதிப்பீட்டில் வெள்ளிவாயல், இடையான்சாவடி, சடையான்குப்பம், மணலி புதுநகர் ஆகிய வழியாக செல்லும் கொசஸ்தலையாற்றின் கரைகளை மறுசீரமைப்பு மற்றும் புதியகரை அமைக்கும் பணி

ரூ.15 கோடி மதிப்பீட்டில் வெள்ளிவாயல், இடையான்சாவடி, சடையான்குப்பம், மணலி புதுநகர் ஆகிய வழியாக செல்லும் கொசஸ்தலையாற்றின் கரைகளை மறுசீரமைப்பு மற்றும் புதியகரை அமைக்கும் பணி

திருவள்ளூர் ஜூன் 01 : கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பூண்டி நீர்த்தேக்கத்தின் உபரிநீர் மற்றும் உள்ளூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் வெள்ளநீர், ஆற்றில் பாய்ந்து, பல்வேறு இடங்களில் கரைகள் சேதமடைந்தது. வெள்ளிவாயல், கன்னியம்மன் கோயில் பகுதி, மகாலட்சுமி நகர், வடிவுடையம்மன் நகர், ஆர்.எல், நகர், ஜெனிபர் காலனி போன்ற சுற்று வட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. நாப்பாளையம் பாலத்தின் கீழ் புறத்தில் இருந்து இடையான் சாவடி வரையில் உள்ள இடது கரையும், நாப்பாளையம் பாலத்தின் கீழ்புறத்தில் இருந்து சடையான்குப்பம் கிராமம் வரையிலான வலது கரையும் சேதமடைந்துள்ளது. இதனால் 25,000 கன அடிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுது கரையை ஒட்டியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.

எனவே, மேற்குறிப்பிட்ட வெள்ளப் பாதிப்பினை தவிர்க்கும் பொருட்டு, ரூ.250.00 கோடிக்கு இரண்டாம் கட்ட வெள்ளத் தடுப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இதில், வெள்ளிவாயல், எடையான்சாவடி, சடையான்குப்பம், மணலி புதுநகர் ஆகிய வழியாக செல்லும் கொசஸ்தலையாற்றின் இடது மற்றும் வலது கரையின் சில இடங்களில் கரையினை மறுசீரமைப்பு மற்றும் புதிய கரை அமைக்கும் பணிக்கு மதிப்பீட்டுத் தொகை ரூ.15.00 கோடிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.கடந்த 20.11.2021, 06.12.2021 மற்றும் 20.04.2022 வெள்ளக்காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, வெள்ளம் ஏற்படாமல்; இருக்க நிரந்தர சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வெள்ளிவாயல் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் வலது கரையில் தொலைக்கல் 125.60 கி,மீ முதல் 126.60 கி.மீ. வரையிலும், மணலி புதுநகரில் இடையான் சாவடி மற்றும் சடையான் குப்பம் கிராமங்களில் தொலைக்கல் 128.00 கி.மீமுதல் 132.00 கி.மீ. வரையிலும் மற்றும் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டம் இடையான்சாவடி கிராமத்தில் கொசஸ்தலையாற்றின் இடது கரையில் தொலைக்கல் 128.00 கி.மீ. முதல் 130.00 கி.மீ. வரையிலும் உள்ள ஆற்றின் கரையினை மறுசீரமைத்தல் மற்றும் புதியகரை அமைக்கும் பணியை மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.சுதர்சனம் பணியை தொடங்கி வைத்தார்.இதில் பொறியாளர் சி.பொதுபணிதிலகம் உட்பட துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.